Apple iPhone 17e அறிமுகம் எப்போது? கசிந்துள்ள தகவல்கள்
15 மாசி 2026 ஞாயிறு 11:06 | பார்வைகள் : 1674
ஆப்பிளின் iPhone 17e மொபைல் 2026 பிப்ரவரி 19-ஆம் திகதி அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
iPhone 16e வெளியாகி சரியாக ஒரு வருடம் கழித்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மொபைல் மிகவும் மலிவான விலையில், e வரிசையில் காணப்படும் வடிவமைப்பை தக்கவைத்துகொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிள் அதிகாரபூர்வமாக இந்த விவரங்களை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பல கசிவுகள் மற்றும் அறிக்கைகள் MagSafe சார்ஜிங், A19 சிப் மற்றும் மேம்படுத்தப்பட்ட C1X மோடம் போன்ற புதிய அம்சங்கள் இதில் வழங்கப்படும் என கூறுகின்றன.
குறைந்த விலையில் ஆப்பிள் செயல்திறனை விரும்பும் பயனர்களுக்கு iPhone 17e ஒரு திறமையான தெரிவாக இருக்குமென கூறப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 16e அமெரிக்காவில் சுமார் 599 டொலருக்கு அறிமுகமானது. இந்நிலையில், அதிக சேமிப்பு மற்றும் புதிய அம்சங்களைப் பொறுத்து 17e விலை சற்று அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan