Paristamil Navigation Paristamil advert login

இல்-து-பிரான்சுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!!

இல்-து-பிரான்சுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!!

15 மாசி 2026 ஞாயிறு 08:20 | பார்வைகள் : 518


தலைநகர் பரிஸ் உட்பட இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் கடும் பனிப்பொழிவு காரணமாக ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் என மொத்தமாக 15 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள் எச்சரிக்கையும், 42 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Aisne, Côte-d'Or, Haute-Marne, Nord, Oise, Pas-de-Calais, Paris, Seine-et-Marne, Yvelines, Somme, Essonne, Hauts-de-Seine, Seine-St-Denis, Val-de-Marne மற்றும் Val-d'Oise ஆகிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 3 செ.மீ வரையான பனிப்பொழிவு மஞ்சள் எச்சரிக்கை மாவட்டங்களிலும், அதிகபட்சமாக 6 செ.மீ பனிப்பொழிவு ‘செம்மஞ்சள் எச்சரிக்கை’ மாவட்டங்களிலும் கொட்டித்தீர்க்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்