Paristamil Navigation Paristamil advert login

யூத விரோதத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்கு கட்டாய தகுதி நீக்கம் என ஜனாதிபதி அறிவிப்பு!!

யூத விரோதத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்கு  கட்டாய தகுதி நீக்கம் என ஜனாதிபதி அறிவிப்பு!!

15 மாசி 2026 ஞாயிறு 08:07 | பார்வைகள் : 2578


Emmanuel Macron, யூத விரோதம், இனவெறி மற்றும் பாகுபாடு சார்ந்த செயல்கள் அல்லது கருத்துகளுக்கு குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படும் எனவும் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு கட்டாய தகுதியிழப்பு தண்டனை அமுல்படுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். 

Ilan Halimi அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விழாவில் அவர் பேசும்போது, சமூகத்தின் அனைத்து இடங்களிலும் ஊடுருவி வரும் யூத விரோதத்தை கண்டித்தார். மேலும், யூத விரோத மற்றும் இனவெறிச் செயல்களுக்கு எதிரான தண்டனைகளை வலுப்படுத்த அரசு மற்றும் பாராளுமன்றம் இணைந்து செயல்படும் என்றும், வழங்கப்படும் தண்டனைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

யூத விரோதத்துக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என அவர் வலியுறுத்தினார். டிஜிட்டல் தளங்களில் பரவும் வெறுப்பை கட்டுப்படுத்த பெரிய இணைய தளங்களிடம் கணக்கெடுப்போம் என்றும், அவை நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐரோப்பிய சட்டங்களின் கீழ் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். 

சமீப ஆண்டுகளில், குறிப்பாக 2023 அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு பிறகு, யூத விரோதச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.