Paristamil Navigation Paristamil advert login

Île-de-France பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பனிப்பொழிவு: செம்மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு!!

Île-de-France பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பனிப்பொழிவு: செம்மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு!!

14 மாசி 2026 சனி 20:30 | பார்வைகள் : 638


Île-de-France பகுதியில் பிப்ரவரி 15 ஞாயிற்றுக்கிழமை பனி மற்றும் உறைபனி காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது. 

Météo France தகவலின்படி, காலை 6 மணி முதல் மேற்கில் இருந்து பனிப்பொழிவு தொடங்கி, விரைவில் முழுப் பிராந்தியத்துக்கும் பரவும். ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1 செ.மீ. அளவில் பனி பெய்யும்; மொத்தமாக 1 முதல் 3 சென்ரி மீட்டர் வரை பனிப்பொழிவு பெய்யும். சில இடங்களில் 5 சென்ரிமீட்டர் வரை கூட தேங்கலாம்.

Paris பகுதியில் பனிப்பொழிவானது நீண்ட நேரம் நிலைக்க வாய்ப்பு குறைவு; பிற்பகல் தொடக்கத்தில் குறையத் தொடங்கும்; மதியம் 2 மணிக்குள் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நண்பகல் முதல் வெப்பநிலை உயர்ந்து, மழையாக மாறும்; தரையில் விழுந்த பனி விரைவில் உருகும். ஆனால் சில இடங்களில் உறைபனி ஏற்படும் அபாயம் இருப்பதால் சாலைகள் வழுக்கலாக மாறக்கூடும்.

சாலை போக்குவரத்தே முக்கிய பாதிப்பாக இருக்கும்.மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளப்படுகிறார்கரள். விமானப் போக்குவரத்திலும் 20-30% குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன; Direction générale de l'aviation civile நிறுவனங்களுக்கு விமான எண்ணிக்கையை குறைக்க உத்தரவிட்டுள்ளது. எனவே பயணிகள் முன்கூட்டியே தகவல்களை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

img_6990cd196ddc2.png

 

வர்த்தக‌ விளம்பரங்கள்