இளையராஜா காதலிக்காக இசையமைத்த பாடல் பற்றி தெரியுமா?
14 மாசி 2026 சனி 15:11 | பார்வைகள் : 1654
இளையராஜாவின் இசையை பிடிக்காத ஆளே இருக்க முடியாது. காலம் கடந்தாலும் அவரது பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது. இன்றைய காலகட்டத்தில் வரும் பாடல்கள் ஒரு மாதத்திற்கு மேல் போர் அடித்துவிடுகின்றன. ஆனால் இளையராஜாவின் பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. அந்த அளவுக்கு ஆத்மார்த்தமான இசையால் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார் இளையராஜா. இளையராஜாவின் இசையில் பல்வேறு காதல் பாடல்கள் வந்திருக்கின்றன. அதில் ஒரு தனித்துவமான பாடலைப் பற்றி தான் தற்போது பார்க்க உள்ளோம்.
கடந்த 2002-ம் ஆண்டு தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான திரைப்படம் அழகி. இப்படத்தில் பார்த்திபன் ஹீரோவாக நடித்திருந்தார். அவரின் மனைவியாக தேவையானியும், முன்னாள் காதலியாக நந்திதா தாஸும் நடித்திருந்தனர். அழகி படத்தின் மாபெரும் வெற்றிக்கு வித்திட்டது இசைஞானி இளையராஜாவின் இசையும் பாடல்களும் தான். இப்படத்தில் வரும் ஒளியிலே தெரிவது தேவதையா, பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி பாடல், குருவி கொடஞ்ச கொய்யா பழம் போன்ற பாடல்கள் அடிபொலி ஹிட் அடித்தன.
இப்படத்திலேயே மற்றுமொரு ஸ்பெஷல் பாடல் இருக்கிறது. உன் குத்தமா என் குத்தமா என தொடங்கும் அப்பாடல் வரிகளை பழனி பாரதி எழுதி இருந்தார். இந்த பாடலின் சிச்சுவேஷனே வித்தியாசமானது. நாயகன் பார்த்திபன், தான் பள்ளிப் பருவத்தில் உருகி உருகி காதலித்த தன்னுடைய முன்னாள் காதலியை ஒரு கடினமான சூழ்நிலையில் சந்திக்கிறான். அவளின் நிலையை பார்த்து இடிந்துபோகிறார் பார்த்திபன். எப்படியெல்லாம் வாழவேண்டிய பெண், இப்படி இங்கு நடுரோட்டில் கஷ்டப்படுகிறாலே என்கிற மனவேதனையில் நாயகன் இருக்கும் போது இந்தப் பாடல் தொடங்கும்.
காதல் கைகூடாமல் போனவர்கள் இந்தப் பாடலை கேட்டால் நிச்சயம் கண்ணீர் சிந்துவார்கள். அந்த அளவுக்கு இந்த பாடலில் இசையும், வரிகளும் மனதை ரணமாக்கும். இதற்கெல்லாம் கூடுதல் வலுசேர்க்கும் விதமாக இசைஞானி இளையராஜாவின் குரல் அமைந்திருக்கும். அவர் தன்னுடைய குரலால் அந்த காதலின் வலியை கடத்தி இருப்பார். முன்னாள் காதலியை திருமணத்துக்கு பின் பார்க்கும் நாயகனின் சூழலை சொல்லும் ஒரு உணர்வுப்பூர்வமான பாடலை இளையராஜாவை விட வேறு யாரும் கொடுத்துவிட முடியாது என சொல்லும் அளவுக்கு அப்பாடலை கம்போஸ் செய்திருப்பார் இசைஞானி.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan