Paristamil Navigation Paristamil advert login

கியூபா ஹவானா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

 கியூபா ஹவானா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

14 மாசி 2026 சனி 12:20 | பார்வைகள் : 270


கியூபாவின் தலைநகர் ஹவானாவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் 13.02.2026 திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹவானா வளைகுடாவில் உள்ள 'நிக்கோ லோபஸ்' (Nico Lopez) சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது.

 கரும்புகை வெளியேறுவதை கண்டு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சுத்திகரிப்பு நிலையத்தின் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட இந்தத் தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கியூபாவின் எரிசக்தி மற்றும் சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு, தீ அருகிலுள்ள பகுதிகளுக்கு பரவவில்லை என்றும் தெரிவிக்கபப்டுகின்றது. அதேவேளை கியூபா தனது எரிபொருள் தேவையில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்கிறது.

மீதமுள்ள தேவைக்கு இறக்குமதியையே நம்பியுள்ளது. குறிப்பாக கியூபாவிற்கு வெனிசுலாவிலிருந்து வந்த எண்ணெய் இறக்குமதி, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்