லவ் ப்ரபோஸ் பண்ண போறீங்களா...? புதிய டிப்ஸ்
14 மாசி 2026 சனி 12:11 | பார்வைகள் : 266
இந்த வருடமாவது லவ் ப்ரபோஸ் பண்ணிடணும். அதுவும் வித்தியாசமா பண்ணணும், அது நீங்கள் விரும்பும் ஆளுக்கும் பிடிக்கணும், சும்மா கவிதை மாதிரி அழகா இருக்கணும்னு நினைச்சீங்கன்னா இந்த ஐடியாவுல ஏதாவது ஒன்று டிரை பண்ணுங்க. செம ஃபீலிங்கா இருக்கும். மிஸ் ஆகாம சக்ஸஸ் ஆகும். அந்த ஐடியாக்கள் என்னென்னனு பார்த்திடுவோம்.
லவ் ப்ரபோஸ் என்றாலே அது ஆண் பெண்ணுக்கு பண்ணுவது என்று தான் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது அந்த புரிதலே முற்றிலும் மாறியிருக்கிறது. ஆண், பெண் இருவரில் யார் வேண்டுமானாலும் அவர்களுக்குப் பிடித்தவர்களுக்கு ப்ரபோஸ் செய்யலாம். எப்படி ப்ரபோஸ் செய்கிறீர்கள், அது உங்கள் காதலரை எப்படி கவர்கிறது என்பதும் நீங்கா நினைவுகளாக இருக்கும். அப்படி சில ப்ரபோஸ் ஐடியாக்கள் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
நீங்கள் ப்ரபோஸ் செய்யப் போகும் நபரை செல்லும் இடத்தில் ஒரு குறிப்புச் சீட்டை எழுதி வைத்து அதன் அடுத்தடுத்த குறிப்புகளை வெவ்வேறு அழகாக இடங்களில் வைத்து விடுங்கள்.
நீங்கள் சீட்டு வைக்கும் ஒவ்வொரு இடமும் ரசிக்கும்படி இருக்க வேண்டும். அதேசமயம் அருகருகே இருக்க வேண்டுமே ஒழிய அலைய வைக்கும்படி இருக்கக் கூடாது. கடைசி குறிப்பு நீங்கள் இருக்கும் இடமாக இருக்க வேண்டும். அவர் எல்லா குறிப்புகளையும் கடந்து உங்களிடம் வரும்போது நீங்கள் உங்கள் அன்பை தெரிவிக்கலாம்.
அழகான இடத்தில் சொல்லுதல்
உங்கள் ஊரில் பீச் இருந்தால் அதுதான் பெஸ்ட் இடம். அல்லது உங்கள் ஊரிலேயே மிக அழகான இடம் எது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அங்கே வரவழைத்து காதலை சொல்லலாம்.
அதுவும் சூரிய அஸ்தமன நேரத்தில் மஞ்சளும் சிவப்புமாய் இருக்கிற வெதுவெதுப்பான சூரியக் கதிர்வீச்சுக்கு இடையில் காதலை சொல்லுங்கள். இருவருக்குமே அது ரம்மியமான பொழுதாக இருக்கும்.
புகைப்பட தொகுப்பு புத்தகம்
நீங்கள் நேசிக்கும் நபர் ஏற்கனவே உங்களுக்கு பழக்கமான நபராக இருக்கும்பட்சத்தில் நீங்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்களை ஆல்பம் போல மாற்றுங்கள்.
கடைசி பக்கத்தில் உங்கள் இருவரின் படங்களை மட்டும் தனித்தனியே ஒட்டவைத்து இனி வாழ்க்கை முழுவதும் இருவர் ஒருவராகி சேர்ந்து வாழ்வோமா என்பது போல ஒரு குறிப்பு எழுதி அந்த ஆல்பம் புத்தகத்தை அமைதியாக கொடுத்து சர்ப்ரைஸ் பண்ணுங்க.
கவிதைகளால் ப்ரபோஸ் செய்யுங்கள்
பெண்களுக்கு அவர்களை ரசிக்கும் ஆண்களை மிகவும் பிடிக்கும்.
அதிலும் ரசிப்பதோடு நிற்காமல் அதை அழகான கவிதை எழுதும் ஆண்களை இன்னும் அதிகமாகவே பிடிக்கும்.
அதனால் நீங்கள் நேசிக்கும் பெண்ணை பற்றியோ அல்லது அவர்களுடன் சேர்ந்தால் உங்கள் எதிர்காலம் எப்படி அழகாக மாறும் என்பது பற்றியும் கவிதையாக எழுதிக் கொடுத்து ப்ரபோஸ் செய்யலாம்.
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
ரசனையோடு காதலை சொல்வது எவ்வளவு முக்கியமானதோ அதைவிட உண்மையாகவும் நேர்மையாகவும் சொல்லுங்கள்.
மனசுக்குள் இருக்கும் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும்சிலர் நிறைய வார்த்தைகளாக, கோர்வையாக பேசுவார்கள். ஆனால் ஆயிரம் வார்த்தைகளில் பேசுவதை ஒரு சமிக்ஞையால் சொல்லிவிட முடியும். அதனால் வார்த்தைகளை விட குறியீடுகள் மிக முக்கியம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan