நாடு முழுவதும் சீரற்ற வானிலை!!
14 மாசி 2026 சனி 10:29 | பார்வைகள் : 2140
பெப்ரவரி 14, இன்று சனிக்கிழமை நாடு முழுவதும் சீரற்ற காலநிலை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எந்த ஒரு மாவட்டமும் மிச்சம் விடாமல் 101 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் Gironde மற்றும் Lot-et-Garonne ஆகிய இரு மாவட்டங்களுக்கும் அதிகபட்சமாக சிவப்பு நிற எச்சரிக்கையும், Morbihan, Loire-Atlantique, Ille-et-Vilaine, Indre-et-Loire, Deux-Sèvres, Charente-Maritime, Charente, Dordogne, Gers, Tarn-et-Garonne, Haute-Garonne, Ariège மற்றும் Tarn ஆகிய 13 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கையும், மீதமுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இல்-து-பிரான்ஸின் அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் இன்றும் நாளையும் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதாக Météo France அறிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில் மழை, வெள்ளம், பனிச்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் எனவும், மாலை வேளைகளில் மிக வேகமான காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan