கரீபியன் கடலில் படகு மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் - மூவர் பலி
14 மாசி 2026 சனி 08:37 | பார்வைகள் : 167
கரீபியன் கடலில் படகு ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்திய இராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அமெரிக்க தெற்கு கட்டளைப்பீடம் (SOUTHCOM), வெள்ளிக்கிழமை (13) அதிகாலை இந்த "உயிர்க்கொல்லி தாக்குதலை" (Lethal kinetic strike) நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்டவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் "நர்கோ-பயங்கரவாதிகள்" (Narco-terrorists) என அமெரிக்கா கூறியுள்ள போதிலும், அதற்கான எந்த ஆதாரத்தையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை.
சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமை வல்லுநர்கள் இத்தகைய தாக்குதல்களை "நீதிக்கு புறம்பான கொலைகள்" (Extrajudicial executions) என்று சாடியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடத்தலில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்கு சட்டப்படியான விசாரணைக்கு உரிமை உண்டு என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேவேளை கடந்த திங்கட்கிழமை கிழக்கு பசிபிக் கடலில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.
2025 செப்டம்பரில் நடந்த முதல் தாக்குதலின் போது, சிதைந்த படகின் பாகங்களைப் பிடித்துக்கொண்டு கடலில் உயிர் தப்ப முயன்றவர்கள் மீதும் அமெரிக்கா இரண்டாவது முறையாகத் தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கைகளின்படி, இதுவரை கிழக்கு பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில் 40 படகுகள் மீது அமெரிக்கா சுமார் 38 தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் மொத்தம் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், லத்தீன் அமெரிக்க போதைப்பொருள் கடத்தல் குழுக்களுடன் அமெரிக்கா ஒரு "ஆயுதமேந்திய மோதலில்" (Armed conflict) ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் வருவதைத் தடுக்க இத்தகைய தாக்குதல்கள் அவசியமானவை என்றும் டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், சர்வதேச கடல் பகுதியில் இத்தகைய தாக்குதல்களை நடத்த அமெரிக்காவிற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும், இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
அதேவேளை 2025 செப்டம்பர் முதல் சர்வதேச கடல் பரப்பில் அமெரிக்கா நடத்தி வரும் இத்தகைய வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan