பிரதமரின் மாஸ்டர் பட்டம் குறித்த சர்ச்சையும் விளக்கமும்!!
14 மாசி 2026 சனி 08:02 | பார்வைகள் : 468
Syndicat national des agents publics de l'Education nationale (Snapen) தாக்கல் செய்த புகார், Sébastien Lecornu “தன்னிடம் இல்லாத பட்டத்தை அறிந்தே பயன்படுத்தினார்” என குற்றம் சாட்டியது. ஆனால் Cour de justice de la République (CJR) இந்த புகாரை ஏற்க முடியாததாகத் தீர்மானித்துள்ளது.
குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தாலும், அவை சங்கத்தின் நலன்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக சேதம் விளைவிப்பதாக இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் Mediapart வெளியிட்ட தகவலுக்கு பின்னர் தொடங்கியது. அதில், பிரதமருக்கு முழுமையான பொது சட்ட மாஸ்டர் பட்டம் இல்லை எனக் கூறப்பட்டது. ஆனால் இதற்கு பதிலளித்த பிரதமர், குற்றச்சாட்டுகளை “வலுவாக மறுத்து”, இது “செயற்கையாக உருவாக்கப்பட்ட சர்ச்சை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் Snapen மீது “தவறான குற்றச்சாட்டு முன்வைத்தது” (dénonciation calomnieuse) என்ற காரணத்தால் எதிர்புகார் அளிப்பதாகவும் அறிவித்துள்ளார். Sébastien Lecornu, தாம் “சட்டத்தில் maîtrise (அதாவது master 1) முடித்துள்ளேன்” என்றும், அதை Université Panthéon-Assas பல்கலைக்கழகத்தில் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
2000-களில் ஐரோப்பிய தரநிலைகளுக்கு ஏற்ப பிரான்சில் கல்வி மாற்றம் செய்யப்பட்டபோது, master 1 (Bac+4) மற்றும் master 2 (Bac+5) என்ற புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan