ஆயுததாரி கதை முடிந்தது! - யார் இந்த தாக்குதலாளி?? - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!
14 மாசி 2026 சனி 07:00 | பார்வைகள் : 3457
பரிசில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல அதிர்ச்சியூட்டும் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Place de l'Étoile பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் முயற்சி தொடர்பிலும், ஆயுததாரி சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனவும் முதல்கட்ட செய்திகளில் தெரிவித்திருந்தோம். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஆயுததாரி உயிரிழந்துள்ளார்.
47 வயதுடைய Brahim Bahrir என்பவரே தாக்குதலாளியாவார். மருத்துவமனையில் சிகிச்சைகள் பலனின்றி இரவு 9 மணிக்கு உயிரிந்தார் என அறிவிக்கப்பட்டது. குறித்த நபர் தீவிரமான அடிப்படைவாதம் கொண்டவர் எனவும், 1978 ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் மூன்று காவல்துறையினரை கத்தியால் குத்தி தாக்குதல் மேற்கொண்ட வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அதை அடுத்தே நேற்று ஜொந்தாமினர் மீது தாக்குதல் மேற்கொண்ட முற்பட்டார். ஜொந்தாமினரால் அவர் சுடப்படு 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Georges-Pompidou ஐரோப்பிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் 9 மணி அளவில் உயிரிழந்தார்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் (PNAT) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan