ஜனநாயன் எப்போது ரிலீஸ்?.
13 மாசி 2026 வெள்ளி 15:10 | பார்வைகள் : 1094
விஜய் நடித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்த்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை பொங்கலை குறிவைத்து ஜனவரி 9ம் தேதி வெளியிட திட்டமிட்டார்கள்.ஆனால் கடைசி நேரத்தில் ‘தணிக்கை அதிகாரி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். எனவே படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும்’ என தணிக்கை வாரியம் சொன்னதால் ஷாக்கான தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..
ஆனால் அவர் வழக்கு தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் தீர்வு எட்டப்படவில்லை, இந்நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தயாரிப்பாளர் வாபஸ் பெற்றார். அதோடு மறுதணிக்கைக்கும் விண்ணப்பிக்கபட்டது
. எப்படியும் சான்றிதழில் கொடுத்து விடுவார்கள்.. பிப்ரவரி 19 அல்லது 20-ம் தேதியில் படத்தை வெளியிடலாம் என தயாரிப்பாளர் திட்டமிட்டார். ஆனால் இப்போது வரை மறுதணிக்கை செய்யப்படவில்லை..
20ம் தேதிக்குள் சான்றிதழை கொடுத்துவிட்டால் பிப்ரவரி 27ஆம் தேதி ஜனநாயகம் வெளியாக வாய்ப்பிருக்கிறது.. அப்படி இல்லையெனில் ஜூன் மாதத்தில்தான் படம் வெளியாகும் என்கிறார்கள். ஏனெனில் மார்ச் மாதம் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும்.. ஏப்ரல் மாதம் தமிழகத்தில் தேர்தல் நடைபெறுகிறது. மே மாதம் தேர்தல் ரிசல்ட் என்பதால் விஜய்க்கு ஆதராக இருந்தால் மே மாதம் படம் வெளியாகலாம்.. இல்லையேல் ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பு என்கிறார்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan