Paristamil Navigation Paristamil advert login

Jordan Bardella-வை போன்ற பெரிய பொம்மை கார்னிவேலில் எரிப்பு!!

Jordan Bardella-வை போன்ற பெரிய பொம்மை கார்னிவேலில் எரிப்பு!!

13 மாசி 2026 வெள்ளி 13:40 | பார்வைகள் : 447


Hasparren நகரில் பிப்ரவரி 7 அன்று நடைபெற்ற கார்னிவேலில், Jordan Bardella-வை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரிய பொம்மை எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, Parquet de Bayonne பிப்ரவரி 13 அன்று விசாரணையைத் தொடங்கியது. 

Pyrénées-Atlantiques மாகாணத்தின் பிரிஃபெட் அதிகாரி, சட்டத்தின் 40வது பிரிவின் அடிப்படையில் அரசு வழக்கறிஞரிடம் தகவல் அளித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில், கோட் அணிந்த நிலையில் “I < 3 Marine” மற்றும் “RN” என்று எழுதப்பட்ட கைப்பட்டைகளுடன் உள்ள பொம்மை எரிக்கப்படுவது காணப்படுகிறது. 

X தூளத்தில், Mathieu Valet, Rassemblement National கட்சியின் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர், இந்த நிகழ்வை கடுமையாக கண்டித்து, இது அரசியல் வெறுப்பின் வெளிப்பாடு என தெரிவித்துள்ளார்.

https://x.com/i/status/2021620723186307093

 

வர்த்தக‌ விளம்பரங்கள்