Paristamil Navigation Paristamil advert login

தமிழ்நாட்டை வியந்து பாராட்டிய ஆனந்த் மகேந்திரா!

தமிழ்நாட்டை வியந்து பாராட்டிய ஆனந்த் மகேந்திரா!

13 தை 2026 செவ்வாய் 11:50 | பார்வைகள் : 127


பெருங்குடியில் பயோ மைனிங் மூலம் 50 லட்சம் மெட்ரிக் டன் குப்பை மறுசுழற்சி செய்ததை ஆனந்த் மகேந்திரா பாராட்ட, ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். 2027ல் முழுமை இலக்கு.

பயோ மைனிங் முறையில் குப்பைகளை மறுசுழற்சி செய்ததை தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வரவேற்ற நிலையில் அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

பெருங்குடியில் 50 வருடங்களாக கொட்டிக் கிடந்த குப்பைகளை பிளாஸ்டிக், உலோகம் என தரம் வாரியாக பிரித்து பயோ மைனிங் முறையில் மறுசுழற்சி பொருட்களாக மாற்றிய சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை வரவேற்புக்குரியது என தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அந்த பதிவை மேற்கொள்காட்டி நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெருங்குடியில் பயோ மைனிங் முறையில் பல ஆண்டுகளாக கிடந்த 90 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகளில் 50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் மறுசுழற்சி பொருட்களாக மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மீதமுள்ள கழிவுகளை 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், முற்றிலும் அறிவியல்பூர்வ மற்றும் இயற்கை நலன் சார்ந்த கழிவு மேலாண்மையை கையாண்டு வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குப்பை கிடங்கை முற்றிலுமாக அகற்றுவதிலும், திறமையான கழிவு மேலாண்மை செயலாக்கத்தை உறுதி செய்வதிலும் அரசு கவனம் செலுத்தி வ்ருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்