தே.ஜ., கூட்டணியில் யார் யார்? அமித் ஷா முடிவெடுப்பார்: பா.ஜ.
13 தை 2026 செவ்வாய் 03:45 | பார்வைகள் : 126
த.வெ.க., தலைவர் விஜய்க்கு, சி.பி.ஐ., விசாரணை வாயிலாக நெருக்கடி தர வேண்டிய அவசியம் பா.ஜ.,வுக்கு இல்லை,” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரையில், நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழகத்துக்கு ஜன., 23ல் வரும் பிரதமர் மோடி, மதுரையில் பங்கேற்கும் பொதுக்கூட்டம் மிகப் பிரமாண்டமாக நடத்தப்படும்.
தொடர்ந்து, சென்னை, திருச்சியிலும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறோம்.
மதுரை பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சியினர் யாரெல்லாம் பங்கேற்பர் என்பதை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முடிவு செய்வர்.
மதுரை வரும் பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் செல்வாரா என்பது அவரது வேலைப்பளுவைப் பொறுத்தது. சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணியில் பா.ஜ., அதிக சீட் கேட்கிறது என்பது குறித்தெல்லாம் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.
பா.ம.க., அன்புமணிக்கு எதிராக தேர்தல் கமிஷனில் ராமதாஸ் கடிதம் அனுப்பியது பற்றி கருத்தில்லை. அது, அவர்களின் உட்கட்சி பிரச்னை.
த.வெ.க., தலைவர் விஜயை, தேர்தல் கூட்டணிக்காகவே சி.பி.ஐ., விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறுவது தவறு. விஜய்க்கு நெருக்கடி தர வேண்டிய அவசியம் பா.ஜ.,வுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan