தேசிய தன்னார்வ இராணுவ சேவைக்காக இளைஞர்களை ஆட்சேர்ப்பு!!
12 தை 2026 திங்கள் 22:14 | பார்வைகள் : 824
பிரான்ஸ் அரசு 18 முதல் 25 வயதுடைய இளைஞர்களுக்கான புதிய தேசிய இராணுவ சேவை ஆட்சேர்ப்பு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த தன்னார்வ சேவை 2026 செப்டம்பரில் ஆரம்பமாகி, முதற்கட்டமாக 3,000 பேர் சேர்க்கப்படுவர். சேவை காலம் 10 மாதங்கள் ஆகும்; இதில் பங்கேற்பவர்கள் மாதம் 800 யூரோ சம்பளம் பெறுவார்கள். உணவு, தங்குமிடம் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
2030க்குள் ஆண்டொன்றிற்கு 10,000 பேரையும், 2035க்குள் 42,500 பேரையும் சேர்ப்பதே அரசின் இலக்காகும். இந்த சேவை தேர்ந்தெடுக்கும் முறையில் நடைபெறும்; விண்ணப்பதாரர்களின் ஆர்வமும் இராணுவத் துறைகளின் தேவைகளும் முக்கிய அளவுகோல்களாகும்.
சேவை தொடங்குவதற்கு முன் ஒரு மாத பயிற்சி வழங்கப்படும், அதன் பின் 9 மாதங்கள் பிரான்ஸ் நாட்டின் எல்லைக்குள் பாதுகாப்பு, கண்காணிப்பு, சைபர் பாதுகாப்பு, ட்ரோன் எதிர்ப்பு, கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இளைஞர்கள் இராணுவ ஒழுக்க விதிகளுக்கும் குழுவாக வாழும் முறைக்கும் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். சேவை முடிந்த பின், இளைஞர்கள் மீண்டும் படிப்பைத் தொடரலாம், ரிசர்வ் படையில் சேரலாம் அல்லது நிரந்தரமாக இராணுவத்தில் பணியாற்றலாம்.
நீண்டகால இராணுவ சேவை கட்டாயமல்ல என அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய தேசிய இராணுவ சேவை, முன்பு நடைமுறையில் இருந்த, பொது தேசிய சேவை (SNU) திட்டத்தை மாற்றி வருகிறது; தற்போதைய பாதுகாப்பு சூழலுக்கு அது பொருத்தமற்றதாகிவிட்டதாக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan