Paristamil Navigation Paristamil advert login

தமிழ் யாரையும் வேறுபடுத்தி பிரித்துப் பார்க்காது ! உதயநிதி ஸ்டாலின்

தமிழ் யாரையும் வேறுபடுத்தி பிரித்துப் பார்க்காது ! உதயநிதி ஸ்டாலின்

12 தை 2026 திங்கள் 10:45 | பார்வைகள் : 146


உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பங்களிப்பை, சாதனைகளைக் கொண்டாடும் வகையில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற 'அயலகத் தமிழர் தினம் 2026' விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில், அயலக தமிழர் தினம் விழா மலரை துணை முதலமைச்சர் வெளியிட, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அதனை பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ் மொழி நம் அனைவரையும் இணைக்கக் கூடிய மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்து பார்க்காது, யாருக்கும் எந்த பேதத்தையும் காட்டாத மொழி தான் நம்முடைய தாய்மொழி, தமிழ் மொழி.

வர்த்தக‌ விளம்பரங்கள்