Paristamil Navigation Paristamil advert login

நாட்டின் தன்னம்பிக்கையை பிரதமர் மோடி மீட்டெடுத்துள்ளார்! முகேஷ் அம்பானி

நாட்டின் தன்னம்பிக்கையை பிரதமர் மோடி மீட்டெடுத்துள்ளார்! முகேஷ் அம்பானி

12 தை 2026 திங்கள் 07:35 | பார்வைகள் : 123


நாட்டின் தன்னம்பிக்கையை பிரதமர் மோடி மீட்டெடுத்துள்ளார் என தொழிலதிபர் முகேஷ் அம்பானி பாராட்டி உள்ளார்.

குஜராத்தில் நடந்த மாநாட்டில் முகேஷ் அம்பானி பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை அடுத்த 50 ஆண்டுகளுக்கு இந்தியாவின் பாதையை மாற்றியமைத்துள்ளது. இந்திய வரலாற்றில் இதுவரை இவ்வளவு நம்பிக்கை, தன்னம்பிக்கையை நாம் கண்டதில்லை.

நாட்டின் தன்னம்பிக்கையை பிரதமர் மோடி மீட்டெடுத்துள்ளார். இந்தியா புவிசார் அரசியல் கொந்தளிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அது நரேந்திர மோடி என்ற வெல்ல முடியாத பாதுகாப்புச் சுவரைக் கொண்டுள்ளது.

புவிசார் அரசியல் சூழ்நிலை எதிர்பாராத சில கொந்தளிப்புகள் உட்பட புதிய சவால்களை உருவாக்குகிறது. இந்தியாவிற்கு உறுதியளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த சவால்கள் நம் மக்களைத் தொடவோ அல்லது தொந்தரவு செய்யவோ முடியாது.பிரதமரின் தலைமையின் கீழ், இந்தியா எதிர்காலத்திற்கு தயாராகி வருவது மட்டுமல்ல, அதை வடிவமைத்து  வருகிறது.

ஆண்டில் ஒலிம்பிக்கை ஆமதாபாத்தில் நடத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆதரிக்கும். ரிலையன்ஸ் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதை இரட்டிப்பாக்கி ரூ.7 லட்சம் கோடியாக உயர்த்தும். ஒவ்வொரு குஜராத்திக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் அதிவேக வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் மற்றும் அதிக செல்வத்தை உருவாக்குவோம் என்று இன்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு முகேஷ் அம்பானி பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்