Sainte‑Soline - அரசிற்கு எதிராக மீள் வழக்கு!
11 தை 2026 ஞாயிறு 11:45 | பார்வைகள் : 697
2023 மார்சில் சன்-சயோலின் (Sainte‑Soline) பகுதியில் தடைசெய்யப்பட்ட நீர்த்தேக்க எதிர்ப்பு (antibassines) போராட்டத்தின் போது காவல்துறையினரால் கடுமையாக காயமடைந்த சில போராட்டக்காரர்கள், தங்களின் புகார்கள் டிசம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கை மீண்டும் திறக்க புதிய புகார்கள் அளிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
Poitiers நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில், Mickaël Boulay (10 நாட்கள் கோமா) , Serge Duteuil‑Graziani (2 மாதங்கள் மயக்கம்) ஆகியோரின் குடும்பங்கள் 8 நாட்களுக்குள் புதிய புகார் அளிப்பதாக தெரிவித்தனர்.
காணொளிகள் புதிய ஆதாரமாக:
Serge‑ன் தந்தை Jean‑Pierre Duteuil கூறியது :
“முதல் முறையில் Serge கோமாவில் இருந்ததால் புகாரில் சேர முடியவில்லை; இப்போது சேர்கிறார். ஊடகங்களில் வெளியான காணொளிகளில், சில காவல்துறையினர் குண்டுகளை நேராக எறிந்ததும், காயமடைந்தவர்களைப் பார்த்து மகிழ்ந்ததும் பதிவாகி உள்ளன என அவர் குறிப்பிட்டார்.
Serge‑க்கு தற்போது கண் மற்றும் செவித் திறன் பிரச்சினைகள் உள்ளன.
Boulay கூறியது :
“எனக்கு மூளையில் இரத்தக்கசிவு, நினைவிழப்பு ஆகியன உள்ளன. காவற்துறையினர்கு முக்கியமாக ஜோந்தார்மினர்க்கு இவ்வளவு வன்முறை ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
குண்டு எறிதல் விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்ததாக நீதித்துறை கூறியது.
மற்ற மூன்று எறிதல்கள் விதிமுறைக்கு எதிரானவை, ஆனால் அப்போது நிலைமை மிகவும் வன்முறையானது என்பதால் “நியாயப்படுத்தப்படலாம்” என கூறப்பட்டது. குண்டுகளை எறிந்தவர்களை உறுதியாக அடையாளம் காண முடியவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும் சில 'நேரடி குண்டு எறிந்தமைகள்' குறித்து புதிய நீதித்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, எனவும் தெரிவித்து முன்னைய புகர்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
புதிய புகார் பொதுமக்கள் சார்பாக partie civile முறையில் அளிக்கப்படுவதால், ஒரு புதியவிசாரணை நீதிபதி நியமிக்கப்படுவார். இது “தவறான விசாரணை மற்றும் செயலிழந்த நீதித்துறை”க்கு எதிராக ஒரு நம்பிக்கையாக இருப்பதாக 'Bassines Non Merci' குழுவின் பேச்சாளர் ஜுலியன் லு-குவே (Julien Le Guet) தெரிவித்துள்ளார்
அவர் 25 மார்ச் அன்று நாடு முழுவதும்
காவல்நிலையங்கள்
ஆளுநர் அலுவலகங்கள்
அமைச்சகங்கள்
ஆகியவற்றின் முன்னிலையில் புதிய பெரும் போராட்டங்களை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan