மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்
10 தை 2026 சனி 06:24 | பார்வைகள் : 136
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி அணி), தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், சில கட்சிகள் கூட்டணியில் இணையும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அதிமுகவில் இன்னும் கூட்டணியே இறுதி செய்யப்படாத நிலையில், அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான பாஜக, தொகுதி பங்கீட்டிற்கு சென்றுவிட்டது. அக்கட்சி 56 தொகுதிகளையும், ஆட்சியில் பங்கும் கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதிமுகவோ 30-க்கு மேல் தொகுதிகள் தர முடியாது, ஆட்சியிலும் பங்குதர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில்தான் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். ஆனால், அவர் பாஜகவுக்கான தொகுதி ஒதுக்கீடு 50-க்கும் குறையக்கூடாது என்று கறாராக சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், இம்மாதம் இறுதியில் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பாஜகவுக்கான தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதை இப்போது சொல்ல முடியாது என்று கூறினார்.
ஏற்கனவே, பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதனால், அதிமுக கூட்டணியில் தொகுதிகளை இறுதி செய்வதற்காக விரைவில் பாஜக தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயல் தமிழகம் வர இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திரமோடி மதுரை வர இருக்கிறார். அன்றைய தினம் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள அம்மா திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த கட்சி தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. மொத்தத்தில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan