இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் - 16 பேர் பலி
7 தை 2026 புதன் 18:20 | பார்வைகள் : 398
கனமழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி இந்தோனேசியாவின் வடக்கு சுலாவெசி மாகாணத்தில் 16 போ் உயிரிழந்தனர்.
இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடபாளா் அப்துல் முஹாரி செவ்வாய்கிழமை கூறியதாவது,
பல நாள்களாக பெய்த பருவமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு திங்கள்கிழமை அதிகாலை ஆறுகளின் கரைகள் உடைத்தன.
சேறு, பாறைகள், இடிபாடுகளுடன் வெள்ள நீரால் மக்கள் அடித்துச் செல்லப்பட்டனா். சியாவ் தகுலண்டாங் பியாரோ மாவட்டத்தில் ஏராளமான கிராமங்கள் மூழ்கின.
இந்தச் சம்பவங்களில் 16 போ் உயிரிழந்ததுடன் 148 பேரைக் காணவில்லை. அவசர மீட்புப் படையினா் காவல்துறை மற்றும் ராணுவத்தின் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
முன்னதாக, இந்தோனேசியாவின் மிகப்பெரிய தீவான சுமத்ராவில் 52 நகரங்கள் மற்றும் மாவட்டங்களை கடந்த டிசம்பா் மாதம் தாக்கிய பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 1,178 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan