Paristamil Navigation Paristamil advert login

பக்தர்கள் போற்றும் ஆட்சி இது: முதல்வர் ஸ்டாலின்

பக்தர்கள் போற்றும் ஆட்சி இது: முதல்வர் ஸ்டாலின்

7 தை 2026 புதன் 16:24 | பார்வைகள் : 183


பக்தர்கள் போற்றும் ஆட்சி இது" என மக்கள் தீர்ப்பில் தெரியவரும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினார்

இது குறித்து, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”மத உணர்வுகளைத் தூண்டிக் குளிர்காய யார் - எவ்வளவு முயன்றாலும், திரும்பவும் திராவிட மாடல் அரசுதான்!

தீரத்துக்கும் உறுதிக்கும் பெயர்பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 1,595 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்று, புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டேன்.

நான்கரை ஆண்டுகளில் 4,000 கோயில் குடமுழுக்குகளை நடத்தி பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ள நம் அரசை அவதூறுகளால் வீழ்த்தி விடலாம் என்று நினைத்தால்... வெரி சாரி, உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது!

தமிழ்நாட்டின் reality-யும் புரியாமல், வகிக்கும் பொறுப்பின் dignity-யும் உணராமல் பொய்க் குற்றச்சாட்டுகளை வாசிப்பவர்களுக்கு, "பக்தர்கள் போற்றும் ஆட்சி இது" என மக்கள் தீர்ப்பில் தெரியவரும்!” என்று குறிப்பிட்டுள்ளார்

வர்த்தக‌ விளம்பரங்கள்