சபரிமலை தங்கம் திருட்டு திட்டமிடப்பட்ட சதி: எஸ்ஐடி அறிக்கை தாக்கல்
7 தை 2026 புதன் 10:51 | பார்வைகள் : 165
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு பின்னணியில் மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்ட சதியை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில்,சிறப்பு புலனாய்வு குழு அம்பலப்படுத்தி உள்ளது.
கேரளாவின் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில், 2019ல் புனரமைப்பு பணிகள் நடந்தன. கருவறை முன்பிருந்த துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள் புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. தங்க முலாம் பூசப்பட்டு மீண்டும் அணிவிக்கும்போது, துவார பாலகர் சிலைகளின் தங்க கவசத்தில் இருந்து 4 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது. கருவறை கதவுகளில் இருந்தும் தங்கம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கேரள உயர் நீதிமன்ற உத்தரவுபடி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர், நிர்வாக அதிகாரி உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கில், கேரள உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், தங்கம் திருட்டில் திட்டமிடப்பட்ட துல்லியமான சதி குறித்து அந்த அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்ள்ளதாக வெளியான தகவல்: சபரிமலையில் வடந்த தங்கம் திருட்டு நன்கு திட்டமிடப்பட்ட சதி. குற்றம்சாட்டபட்டவர்கள் கருவறையில் இருந்து மீதம் உள்ள தங்கத்தையும் திருட திட்டமிட்டு இருந்தனர். துவார பாலகர் சிலைகள், ஏழு பகுதி கதவு மற்றும் கருவறையின் தங்க முலாம் ஆகியவற்றில் இருந்து தங்கத்தை திருட சதித்திட்டம் தீட்டப்பட்டது. ஸ்மார்ட் கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்துடன் தொடர்புடைய சங்கர், கதவில் இருந்து 409 கிராம் தங்கத்தை பிரித்தெடுத்தார். பின்னர் அந்த தங்கம் பெல்லாரியைச் சேர்ந்த தங்க வியாபாரி கோவர்தனிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அக்., மாதம் மோசடி வெளிச்சத்துக்கு வந்த பிறகு, உயர்நீதிமன்றம் தலையிட்டது. இந்தக் காலகட்டத்தில் தான் மூன்று முக்கிய குற்றவாளிகள் பெங்களூருவில் சந்தித்தனர்.மொபைல்போன் டவர் தரவுகளன்படி முதல் குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்தி, பத்தாவது குற்றவாளியான பங்கஜ் பண்டாரி மற்றும் கோவர்தன் ஆகியோர் 2025ம் ஆண்டு அக்., மாதம் பெங்களூருவில் சந்தித்து பேசினார். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டால் அல்லது அவர்கள் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூன்று பேரும் விவாதித்துள்ளனர். அவர்கள் ஆதாரங்களையும் அழிக்க முயன்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan