RER A ரயிலில் தூங்கிய பயணிக்கு கத்திக் குத்து: குற்றவாளி தப்பியோட்டம்!!
5 தை 2026 திங்கள் 13:09 | பார்வைகள் : 814
இவ்லின் (Yvelines) மாவட்டத்தில் உள்ள வேஸினே (au Vésinet) நோக்கிச் சென்ற RER ரயிலில், இன்று காலை 8 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த நபரின் முகத்தில், கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
53 வயதுடைய அந்த நபருக்கு கன்னம் மற்றும் கைகளில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன; அவசர சிகிச்சை தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது கடந்த பத்து நாட்களில் இல்-து-பிரான்ஸ் பகுதியில் பொதுப் போக்குவரத்தில் நடந்த மூன்றாவது தாக்குதலாகும்.
RATP தகவலின்படி, Chatou ரயில் நிலையத்தில் அவசர அலாரம் இயக்கப்பட்டு, பின்னர் ரயில் La Défense நோக்கி சென்றது. காவல்துறையினர், தீயணைப்பு படை மற்றும் GPSR உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான உதவிகளை வழங்க RATP-இன் பாதிக்கப்பட்டோர் உதவி பிரிவு செயல்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய நபர் தப்பியோடியுள்ளதால், இதுவரை கைது செய்யப்படவில்லை. “கடுமையான வன்முறை” என்ற குற்றச்சாட்டின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan