பனி மற்றும் பனிக்கட்டி: திங்கட்கிழமை இல்-து-பிரான்ஸ் பாதிக்கப்படுமா?
4 தை 2026 ஞாயிறு 21:07 | பார்வைகள் : 2543
பிரான்சின் வடமேற்கு பகுதியில் கடும் குளிர் தொடரும் நிலையில், மெத்தெயோ பிரான்ஸ் ஏழு மாவட்டங்களுக்கு பனி மற்றும் உறைபனி காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Finistère, Côtes-d’Armor, l’Ille-et-Vilaine, la Manche, l’Orne, l’Eure மற்றும் la Seine-Maritime ஆகிய துறைகளில் நள்ளிரவிலிருந்து பனி மற்றும் பனி கலந்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவு போக்குவரத்தில் சிரமங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
திங்கட்கிழமை இல்-து-பிரான்ஸ் பாதிக்கப்படுமா?
வானிலை முன்னறிவிப்பாளர்கள், «வரவிருக்கும் இரவின் தரவுகளின் அடிப்படையில்», இந்த ஆரஞ்சு எச்சரிக்கை பனி மற்றும் உறை பனிக்காக பே-து-லுவார் (Pays de la Loire) மற்றும் இல்-து-பிரான்ஸ் பகுதிகளுக்கும் திங்கட்கிழமை காலை 6 மணியிலிருந்து பனி பெய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் காலத்திலிருந்து நிலவி வரும் இந்த குளிர்கால காலநிலை, தீவிரம் குறைந்ததாக இருந்தாலும், அதன் தொடர்ச்சியான நிலை காரணமாக குளிரை அதிகம் உணரும் மக்களை கடுமையாக பாதிக்கிறது. இந்த நிலைமைகள் இன்னும் சில நாட்கள், குறைந்தபட்சம் ஜனவரி 10 மற்றும் 11 தேதிகள் கொண்ட வார இறுதி வரை நீடிக்கக் கூடும்; அதன் பின்னர் வெப்பநிலை மெதுவாக உயர வாய்ப்பு உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan