Paristamil Navigation Paristamil advert login

தொடர்கிறது சீரற்ற வானிலை! - சிவப்பு, செம்மஞ்சள் எச்சரிக்கைகள்!!

தொடர்கிறது சீரற்ற வானிலை! - சிவப்பு, செம்மஞ்சள் எச்சரிக்கைகள்!!

19 மாசி 2026 வியாழன் 07:00 | பார்வைகள் : 1543


கடந்த நாட்களைப் போல, இன்று பெப்ரவரி 19, வியாழக்கிழமையும் சீரற்ற வானிலை தொடர்வதாக Météo France அறிவித்துள்ளது.

நான்கு மாவட்டங்களுக்கு வெள்ளம் காரணமாக ‘சிவப்பு’ நிறத்தில் அதிகபட்ச எச்சரிக்கையும்,

21 மாவட்டங்களுக்கு புயல் மற்றும் பனிச்சரிவு, கடற்கொந்தளிப்பு காரணங்களினால் நடுத்தர ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கையும்,

மழை, வெள்ளம், பனிப்பொழிவு, இடி மின்னல் தாக்குதல் காரணங்களினால் நாட்டின் 68 மாவட்டங்களுக்கு குறைந்தபட்ச எச்சரிக்கையான ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதில் இல்-து-பிரான்சின் சில மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன.