Paristamil Navigation Paristamil advert login

ரோடு முதல் வீடு வரை திமுகவை திட்டுகின்றனர்: அண்ணாமலை

ரோடு முதல் வீடு வரை திமுகவை திட்டுகின்றனர்: அண்ணாமலை

5 தை 2026 திங்கள் 12:56 | பார்வைகள் : 149


ரோடு முதல் வீடு வரை மக்கள் திமுகவை திட்டுகின்றனர்,'' என புதுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் யாத்திரையின் நிறைவு விழா புதுக்கோட்டையில் நடந்தது.

சந்தி சிரிக்கிறது
இம்மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது: நயினார் நாகேந்திரன் பாத யாத்திரையின் போது, திமுக அரசு சரியாக அனுமதி கொடுக்கவில்லை. தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் ஸ்டாலினை விட அமித்ஷாவை பறறி மக்கள் தெரிந்து வைத்துள்ளனர்.

அமித்ஷாவின் செயல்பாடுகளை பார்த்து கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இந்தியாவில் அமித்ஷா திறம்படபணியாற்றி கொண்டுள்ளார். இந்தியாவில் நக்சல்களை முடிக்கும் நிலையில் இருக்கிறது. 2 மாதத்தில் முற்றிலும் முடித்துக் காட்டுவார்.

2026க்கு பிறகு திமுக வேண்டாம் என அனைவரும் சொல்கின்றனர். இந்த யாத்திரையின் வெற்றி அதை பிரதிபலிக்கிறது.90 நாட்களில், மக்களின் பிரதிபலிப்பை எதிரொலிக்கும் தேஜ கூட்டணி நிலவுகிறது. மாற்றம் நடந்தே தீரும். ரோட்டில் இருந்து, வீடு வரை திமுகவை திட்டுகிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

காலம் கடத்தல்

பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் மட்டும் நிலவுகிறது.முதல்வரின் கழுத்து இடது, வலது பக்கம் மட்டுமே திரும்பும். என்ன நடப்பது என்றே தெரியாமல் நான்கு ஆண்டுகள் காலம் கடத்தியவர் ஸ்டாலின் மட்டும் தான்.

கடன்

பொங்கலுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என ஸ்டாலின் சொல்கிறார். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த போது ஒரு ரேசன் கார்டு மீது 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் கடன் இருந்தது. இன்று 2026 ஜன., மாதத்தில் ஒரு ரேசன் கார்டு மீது இருக்கும் கடன் 4 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் ஆக மாறி உள்ளது. 2 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் கடன் அட்டை மீது ஏற்றி உள்ளீர்கள்.கடந்த ஐந்தாண்டுகளில் வெறும் 5 ஆயிரம் கொடுத்துவிட்டு 4.55 லட்சம் கடன் ஏற்றி வைத்துள்ளார். இதில் தான் திமுகவின் கில்லாடி.இந்த கடனை திமுக கட்டப்போவதில்லை. மக்கள் தான் கட்டப்போகிறார்கள்.

யாரையும் ஏமாற்றி ஆட்சி கட்டிலில் திமுக அமர்வதற்கு இடம்கொடுக்கக்கூடாது. திமுக அளித்த வாக்குறுதிகளில் 50 கூட நிறைவேற்றாமல் நேற்று, 80 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக பொய் சொல்கிறார். முதல்வரே பொய் சொல்லும் ஆட்சி இது. வாக்குறுதி நிறைவேற்றம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். திமுக அளித்த வாக்குறுதிகள் இணையத்தில் அகற்றப்பட்டுள்ளன.

மருந்து

தமிழகத்துக்கு வரும் முதலீடுகள் ஏன் ஆந்திராவுக்கு செல்கிறது.தமிழகத்துக்கு மத்திய அரசு நிறுவனங்களை அனுப்பினால், இங்குள்ளவர்கள் கமிஷன் கேட்கின்றனர். கள்ளச்சாராயம், கரப்சனில் தமிழகம் ஒன்றாக இருக்கிறது. உங்கள் வலிக்கு எல்லாம் ஒரே மருந்து தேஜ கூட்டணி. 2026 சட்டசபை தேர்தலில் அந்த மருந்தை வாங்குங்கள்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்