நாளைக்கு தேர்தல் நடந்தாலும் திமுக வீட்டுக்கு செல்வது உறுதி! எல்.முருகன் கணிப்பு
4 தை 2026 ஞாயிறு 13:18 | பார்வைகள் : 224
நாளைக்கு தேர்தல் நடந்தாலும் திமுக வீட்டுக்கு செல்வது உறுதி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றைக்கு திருச்சிக்கு வர இருக்கிறார். புதுக்கோட்டையில் நடக்க உள்ள எங்களுடைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட யாத்திரையின் நிறைவு விழா அமித்ஷா கலந்து கொள்கிறார்.
பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நாளை பொங்கல் விழாவில் அமித்ஷா பங்கேற்கிறார்.
வாக்குறுதிகள்
முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். ஒரு வாக்குறுதிகளை கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. முக்கியமாக சொன்னால், நர்சுகள் இன்னும் போராடி கொண்டு இருக்கிறார்கள்.
ஆசிரியர்கள் ஒரு புறம் போராடி கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் தூய்மை பணியாளர்கள் ஒருபுறம் போராடி கொண்டு இருக்கிறார்கள். ஜி ராம் ஜி திட்டத்தில் 150 நாட்கள் வேலை கொடுப்போம் என்று சொன்னார்கள். இது குறித்து அவர்கள் வாய் திறக்கவில்லை.
எழுதி வச்சுக்கோங்க
பிரதமர் மோடி 125 நாட்களாக உயர்த்தி, ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். அந்த சட்டத்தை இவர்கள் (திமுக) எதிர்த்து கொண்டு இருக்கிறார்கள். சொன்ன திட்டம் எதையும் நிறைவேற்றவில்லை. நிதி நிலை அறிக்கை ரொம்ப மோசமான சூழ்நிலையில் இருக்கிறது.அரசு ஊழியர்கள் கேட்ட கோரிக்கையை அவர்கள் நிறைவேற்றவில்லை.
இன்னைக்கு எழுதி வைத்து கொள்ளுங்கள், நாளைக்கு தேர்தல் நடந்தாலும் சரி, ஏப்ரலில் தேர்தல் நடந்தாலும் சரி, எப்பொழுது தேர்தல் நடந்தாலும் சரி திமுக வீட்டுக்கு செல்வது உறுதி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan