பெண்களுக்கு பணம், சேலை கொடுத்து தி.மு.க., மாநாட்டுக்கு அழைத்து வந்தனர்!செங்கோட்டையன்
2 தை 2026 வெள்ளி 08:13 | பார்வைகள் : 381
தி.மு.க., மகளிர் மாநாட்டுக்கு, 1,000 ரூபாய் பணம், இலவச சேலை கொடுத்து பெண்களை அழைத்து வந்தனர்,'' என த.வெ.க., நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில், த.வெ.க., அலுவலகத்தை, கட்சியின் கொங்கு மண்டல அமைப்பு செயலரும், மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்தார்.
வாக்குறுதிகள் பின், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தை ஆளும் சக்தி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு மட்டுமே உள்ளதாக, முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு சொல்வது உண்மையென்றால், கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஏன் தோல்வி அடைந்தனர்?
கடந்த சட்டசபை தேர்தலில் அரசு ஊழியர்களை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு பல வாக்குறுதிகளை தந்து, தி.மு.க., வெற்றி பெற்றது. தற்போது எங்கு பார்த்தாலும், அரசு ஊழியர்களின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பெண்களுக்காகவே ஒரு நிகழ்ச்சியை தி.மு.க., நடத்தியது. அந்த கூட்டத்துக்கு, 1,000 ரூபாய் பணம், 500 ரூபாய் மதிப்பிலான இலவச சேலை, உணவு கொடுத்து பெண்களை கூட்டி வந்தனர். ஆனால், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்துக்கு, ஒரு ரூபாய் கூட கொடுக்காமல், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
சலசலப்பு
இதையடுத்து, காங்கேயத்தை அடுத்த சிவன்மலையில், த.வெ.க., அலுவலகத்தை திறந்து வைத்த பின், செங்கோட்டையன் கூறுகையில், “தி.மு.க.,வில், கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் செயல்பாடு காட்டுகிறது.
த.வெ.க., கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிறதோ இல்லையோ, அக்கட்சி தொண்டர்கள், த.வெ.க.,வுக்கு வந்தபடி உள்ளனர்,'' என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan