வேள்பாரி கதையின் நாயகன் யார்?
31 தை 2026 சனி 14:38 | பார்வைகள் : 423
மதுரை எம்பி வெங்கடேசன் எழுதிய வேள்பாரி கதையை சினிமாவாக்க வேண்டும் என்ற சில ஆண்டுகளாக முயற்சி செய்கிறார் ஷங்கர். கொரோனா காலத்தில் அதற்கான திரைக்கதையை எழுதி முடித்துள்ளார். ஆனாலும் படத்தின் பட்ஜெட் காரணமாக படத்தை தயாரிக்க பலர் தயங்குகிறார்கள். பல நடிகர்கள் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுக்க யோசிக்கிறார்கள்.
இந்நிலையில், விக்ரம், ரன்வீர்சிங்கை வைத்து அந்த படத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் ஷங்கர். ஒரு மும்பை நிறுவனம் படத்தை தயாரிக்க இருக்கிறதாம். அந்த படத்தில் ரஜினியை ஒரு கவுரவ வேடத்தில் அல்லது முக்கியமான கேரக்டரில் நடிக்க வைக்க ஆசைப்படுகிறார் ஷங்கர். இதனால், சமீபத்தில் அடிக்கடி ரஜினியை சந்தித்து பேசி வருகிறாராம்.
ஜெயிலர் 2, சிபிசக்ரவர்த்தி படம், அடுத்து கமலுடன் இணைந்து நடிக்கும் படங்களில் பிஸியாக இருக்கும் ரஜினி, ஷங்கருக்கு கால்ஷீட் கொடுக்க தயங்குகிறாராம். இதனால், வேள்பாரி உருவாகுமா? மீண்டும் கிடப்பில் போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியன் 2, கேம் சேஞ்சர் பட தோல்விகளால் தவிக்கும் ஷங்கர், ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், பட்ஜெட், கால்ஷீட், சூழ்நிலை காரணமாக ஷங்கரை பலரும் நம்ப மறுக்கிறார்கள் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan