Paristamil Navigation Paristamil advert login

நாடு முழுவதும் காவல்துறையினர் வசதி குறைபாடுகளை கண்டித்து போராட்டம்!!

நாடு முழுவதும் காவல்துறையினர் வசதி குறைபாடுகளை கண்டித்து போராட்டம்!!

31 தை 2026 சனி 14:37 | பார்வைகள் : 1105


நாடு முழுவதும், 31 ஜனவரி அன்று பல நகரங்களில் காவல்துறையினர், மனிதவளமும் பொருள் வசதிகளும் போதிய அளவில் இல்லாததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சுகாதாரமற்ற காவல் நிலையங்கள், பழுதடைந்த கட்டிடங்கள், பழைய வாகனங்கள் மற்றும் மிக மென்மையானதாக கருதப்படும் நீதித் தீர்ப்புகள் ஆகியவை அவர்களின் முக்கிய குற்றச்சாட்டுகளாக இருந்தன. வலதுசாரியாகக் கருதப்படும் பெரும்பான்மை காவல்த்துறை தொழிற்சங்கமான Alliance அமைப்பின் அழைப்பின் பேரில் இந்த போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

பல காவல் நிலையங்களில் எலிகள், மின்சார கோளாறுகள், பூஞ்சை மற்றும் சுவர் பிளவுகள் போன்ற மோசமான பணிச் சூழ்நிலைகள் காணப்படுவதாக காவல்த் துறையினர் தெரிவித்துள்ளனர். செடான் நகர காவல் நிலையத்தில் (Sedan -Ardennes) கூட ஒரு சுவர் இடிந்து விழுந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது. 

2018ல் புதிய காவல் நிலையம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்தத் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அதே நேரத்தில், 2017 முதல் காவல்துறையினருக்கான நிதி அதிகரித்து வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்ததை தொடர்ந்து, 2026 பட்ஜெட்டில் கூடுதலாக 100 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்