Paristamil Navigation Paristamil advert login

அல்லு அர்ஜூனுக்கு ஜோடி இவரா?

அல்லு அர்ஜூனுக்கு ஜோடி இவரா?

31 தை 2026 சனி 14:22 | பார்வைகள் : 402


தமிழ் சினிமாவின் பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், இந்தமுறை தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் படம் ஒன்றை இயக்குகிறார். இந்த திரைப்படம் அல்லு அர்ஜூனின் 23-வது படமாகும். 

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட இருக்கும் நிலையில், படம் பற்றிய புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. 

அதாவது இந்த படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடிக்க பொலிவூட் சினிமாவின் முன்னணி நடிகை ஷ்ரத்தா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும் இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்களையும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்