Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது

இலங்கையில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது

31 தை 2026 சனி 13:33 | பார்வைகள் : 497


தங்கத்தின் விலை உயர்வாக இருந்த நிலையில், இன்று (31) எதிர்பாராத விதமாக குறைந்துள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று 20,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு பவுண் 24 கரட் தங்கம் 380,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 349,600 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.

அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்