Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலியாவில் ஏலத்திற்கு வரும் 'லிகோலா' கிராமம்!

அவுஸ்திரேலியாவில் ஏலத்திற்கு வரும் 'லிகோலா' கிராமம்!

31 தை 2026 சனி 12:56 | பார்வைகள் : 688


அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள 'லிகோலா' (Licola) என்ற மிகச்சிறிய கிராமம் சுமார் 10 மில்லியன் டொலர் வரை ஏலத்திற்கு வந்துள்ளது.

லயன்ஸ் கிளப் அமைப்புக்குச் சொந்தமான இந்தக் கிராமம், பராமரிப்புச் செலவு மற்றும் நஷ்டம் காரணமாக விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கிராமத்தில் வசிக்கும் மிகச்சில மக்களில் ஒருவரான லியான் ஓ'டோனல், அங்கு ஒரு பொது அங்காடியை நடத்தி வருகிறார்.

தற்போது கிராமம் விற்பனைக்கு வந்துள்ளதால், அவர் தனது கடையையும் வீட்டையும் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்தக் கிராமத்தின் அடையாளமும் அமைதியும் பெரு நிறுவனங்களால் சிதைக்கப்படலாம் என அஞ்சும் லியான், கிராமத்தைக் காக்க 8,000-க்கும் மேற்பட்ட கையெழுத்துகளுடன் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

பாரம்பரியமிக்க ஒரு குக்கிராமம் விற்பனைக்கு வந்திருப்பது அவுஸ்திரேலிய மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்