Paristamil Navigation Paristamil advert login

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

31 தை 2026 சனி 12:48 | பார்வைகள் : 430


திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 3.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடற்பகுதியில் இது ஏற்பட்டிருந்தாலும், அதற்கு அருகிலுள்ள நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்