மின்சாரக்கட்டணம், சேமிப்பு, வங்கிக்கட்டணம் - புதிய மாதம்! - புதிய மாற்றங்கள்!!
31 தை 2026 சனி 11:35 | பார்வைகள் : 1623
பெப்ரவரி 1, புதிய மாதத்தில் பல்வேறு மாறுதல்கள் நடைமுறைக்கு வர உள்ளன. அவற்றைத் தொகுக்கிறது இந்த பதிவு.
மின்சார கட்டணம்!!
நாளை முதல் மின்சாரக்கட்டணம் குறைவடைகிறது. குறிப்பிடத்தக்க வகையில் இல்லாமல், மிகச்சிறிய அளவில், ஆண்டுக்கு 10 யூரோக்கள் சேமிக்கும் விதத்தில் இந்த கட்டணம் குறைவடைகிறது.
சேமிப்புக்கணக்கு!
இரண்டு முக்கிய வங்கு சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி வீதம் குறைவடைகிறது.
livret A மற்றும் LDDS எனப்படும் Livret de développement durable et solidaire ஆகிய இரு கணக்குகளுக்குமான வட்டி வீதம் குறைவடைகிறது. 1.7 இல் இருந்து, நாளை முதல் 1.5% சதவீதமாக வட்டவீதம் வீழ்ச்சியடைகிறது.
அதேவேளை, குறைந்த வருமானத்தைக் கொண்டோருக்கான சேமிப்புக்கணக்கான LEP கணக்கின் வட்டிவீதம் 1.9 சதவீதத்தில் இருந்து 2.5% சதவீதமாக உயர்வடைய உள்ளது.
வங்கிக்கட்டணம்!!
வங்கிச் சேவைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்பட உள்ளன. 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில், சராசரியாக 3% சதவீதமாக கட்டணம் அதிகரிக்கிறது.
சுங்கக்கட்டணம்!!
நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோர், நாளை முதல் சுங்கக்கட்டண அதிகரிப்புக்கு உள்ளாகின்றனர்.
நாளை முதல் 0.86% சதவீதத்தால் கட்டணம் அதிகரிக்கிறது. எவ்வாறாயினும் சென்ற 2025 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் சுங்கக்கட்டணம் குறைவாகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan