சூறாவளிக்கு பின்னரான மீள்குடியமர்த்தலில் நீண்டகால அநீதியை இல்லாமல் செய்வதற்கான வாய்ப்பு
31 தை 2026 சனி 07:11 | பார்வைகள் : 198
அசமத்துவமான சூழ்நிலைகளில் அசமத்துவமான நடத்துமுறைகள் நியாயமற்ற விளைவுகளைக் கொண்டுவரலாம் என்பது நீதியின் ஒரு அடிப்படைக் கோட்பாடு.
ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் 2026 பட்ஜெட்டில் மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்னென்றும் இல்லாத வகையில் தினந்தோறும் மானியத்தை வழங்கியபோது இந்த கோட்பாட்டை ஏற்றுக்கொண்டது. அவ்வாறு செய்ததன் மூலம் பெருந்தோட்டத் துறையில் உள்ள கட்டமைப்பு ரீதியான கட்டுப்பாடுகள் அவர்களுக்கு நீண்டகாலத்துக்கு முன்னத்கவே வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பு மறுக்கப்படுவதற்கு வழிவகுத்தது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
டித்வா சூறாவளி இப்போது அனர்த்த நிவாரணம் வழங்குவதிலும் மீள்குடியமர்த்தலிலும் கட்டமைப்பு ரீதியான கட்டுப்பாடுகள் இருப்பதை தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறது.
அதனால் மீட்சிச் செயன்முறை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களை மீளக்கட்டியெழுப்புகின்ற அதேவேளை, நீண்டகால அநீதிக்கு வழிவகுத்த முக்கியமான கட்டுப்பாட்டை நீக்குவதற்கு மீண்டும் ஒரு தடவை அரசாங்கத்துக்கு வாய்ப்பு ஒன்றை வழங்குகிறது.
பெரும்பாலான மலையக தமிழ் மக்கள் வாழ்வதற்கு சொந்தத்தில் நிலத்தைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் வசிக்கின்ற வீடுகள் வரலாற்று ரீதியான காரணங்களின் விளைவாக அரசினாலும் பெருந்தோட்டக் கம்பனிகளினாலும் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன.
இந்த காரணியின் விளைவாக அதே அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றைய குடிமக்களுக்கு அரசாங்கம் கிடைக்கச் செய்திருக்கின்ற நிவாரணங்களை தோட்டத் தொழிலாளர்களினால் பெறமுடியாமல் இருக்கிறது.
சூறாவளிக்கு பின்னரான காலப்பகுதியில் வீடுகளை துப்புரவு செய்வதற்கு 25 ஆயிரம் ரூபாவையும் சேதமடைந்த வீடுகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு 50 இலட்சம் ரூபாவையும் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்தது.
ஆனால், இந்த உதவித் தொகைகளை பெறுவதற்கான வாய்ப்பு நிலம் மற்றும் வீட்டு உடைமையுரிமையுடன் பிணைக்கப்படுகிறது. இந்த நிபந்தனை தோட்டத் தொழிலாளர்களை உதவித் தொகைகளை பெறுவதில் இருந்து ஒதுக்கி வைக்கிறது.
சூறாவளிக்கு பின்னரான மீள்கட்டுமாணம் தொடர்பாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் ஒன்றில் வீடமைப்புக்காக ஒதுக்கீடு செய்யப்படக்கூடிய போதுமான நிலம் பெருந்தோட்டப் பகுதிகளில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.
அண்மைய வருடங்களில் சுற்றுலாத்துறை, புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் கால்நடை வளர்ப்பு உட்பட வேறு பொருளாதார நோக்கங்களுக்காக பெருந்தோட்டங்களில் கணிசமான பகுதிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
அத்தகைய நடவடிக்கைகளுக்காக பெருந்தோட்ட நிலம் ஒதுக்கீடு செய்யப்படுவது கொள்கைத் தீர்மானங்கள் அனுமதிக்கும் பட்சத்தில் அந்த நிலங்களை விடுவிக்க முடியும் என்பதை காட்டுகிறது.
மேலும், பெருப்தோட்டப் பகுதிகளில் கணிசமான நிலம் பயன்படுத்தப்படாமல் அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படுவதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளும் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் திரும்பத் திரும்ப ஏற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த மதிப்பீடுகள் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. இந்த கண்டுபிடிப்புகள் பிரதான கட்டுப்பாடு நிலம் இல்லாதமை அல்ல என்பதை காட்டுகிறது.
சூறாவளிக்கு பின்னரான மீள்குடியமர்த்தல் செயன்முறை நேர்மைானதாக சகல சமூகங்களையும் உள்ளடக்குவதாக, நீதிக் கோட்பாடுகளுக்கு இசைவானதாக அமைவதை உறுதிப்படுத்தக் கூடியதாக மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு நில உடைமையுரிமையை வழங்குவதற்கு வசதியாக நில ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு தேசிய சமாதானப் பேரவை கோருகிறது.
ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையிலான அரசாங்கம் சகல குடிமக்களையும் சமத்துவமான வர்களாக, பாகுபாடு எதுவுமின்றி நடத்துவதற்கு உறுதி பூண்டிருக்கிறது.
சூறாவளிக்கு பின்னரான பினபுலத்தில், நாட்டின் சுதந்திரத்தின் தொடக்கத்தில் குடியுரிமை பறிக்கப்பட்டதில் இருந்து பாரதூரமான பாகுபாட்டுக்கு உள்ளாகிவரும் ஒரு சமூகத்துக்கு நீதியைச் செய்வதற்காக இந்த சமத்துவக் கோட்பாட்டை அரசாங்கம் பிரயோகிக்க வேண்டும்.
நன்றி வீரகேசரி






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan