Paristamil Navigation Paristamil advert login

19 வயதின் கீழ் ஆண்கள் உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட இங்கிலாந்து தகுதி

19 வயதின் கீழ் ஆண்கள் உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட இங்கிலாந்து தகுதி

31 தை 2026 சனி 07:05 | பார்வைகள் : 181


நியூஸிலாந்துக்கு எதிராக புலாவாயோ குவீன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் வெள்ளிக்கிழமை 30.01.2026 நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கிண்ண குழு 2க்கான சுப்பர் சிக்ஸஸ் போட்டியில் 85 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

இதற்கு அமைய 3 அணிகள் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டுள்ளன.

குழு 1 இலிருந்து அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் குழு 2 இலிருந்து இங்கிலாந்து அணியும் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டுள்ளன.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சனிக்கிழமை (31) நடைபெறவுள்ள போட்டி முடிவு அரை இறுதிக்குச் செல்லும் நான்காவது அணியைத் தீர்மானிக்கும். இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் மெனி லம்ஸ்டென் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல் நியூஸிலாந்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இங்கிலாந்து 50 ஓவர்களில் 234 - 7 விக். (பென் மேயஸ் 53, காலெக் பெல்க்னர் 47, பென் டோவ்கின்ஸ் 42, ஸ்னேஹித் ரெட்டி 28 - 2 விக்., மேசன் க்ளார்க் 38 - 2 விக்.)

நியூஸிலாந்து 38.5 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 169 (ஸ்னேஹித் ரெட்டி 47, ஜஸ்கரன் சாந்து 28, மெனி லம்ஸ்டென் 17 - 5 விக்., செபெஸ்டியன் மோர்கன் 38 - 2 விக்.)

 

வர்த்தக‌ விளம்பரங்கள்