கண்டிய நடனத்துடன் T20 உலகக் கிண்ணம் பல்லேகலை சர்வதேச அரங்கில் காட்சி
31 தை 2026 சனி 07:01 | பார்வைகள் : 183
இலங்கைக்கு சில தினங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட ரி20 உலகக் கிண்ணம் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை 30.01.2026 மாலை காட்சிப்படுத்தப்பட்டது.
கண்டிய நடனத்துடன் இந்தக் கிண்ணம் ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இந்தக் கிண்ணம் நாளைக் காலை தம்புள்ளைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் மாத்தளை பிரதான பஸ் நிலையத்தில் காட்சிப்படுத்தப்படும்.
அதனைத் தொடர்ந்து ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ரி20 உலகக் கிண்ணம் காட்சிக்கு வைக்கப்படும்.
பின்னர் தம்புள்ளை நகரைச் சுற்றி திறந்த பஸ்வண்டியில் ரி20 உலகக் கிண்ணம் கொண்டுசெல்லப்படும்.
அத்துடன் தம்புள்ளை ரஜ மகா விகாரை, தம்புள்ளை குகை விகாரை, சிகிரியா ஆகிய இடங்களுக்கும் ரி20 உலகக்கிண்ணம் கொண்டு செல்லப்பட்டு புகைப்படங்கள் எடுக்கப்படவுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan