Paristamil Navigation Paristamil advert login

ஆசியாவைச் சேர்ந்த பிரபலம் ஒருவருக்கு நேர்ந்த துயரம்!!

ஆசியாவைச் சேர்ந்த பிரபலம் ஒருவருக்கு நேர்ந்த துயரம்!!

30 தை 2026 வெள்ளி 15:15 | பார்வைகள் : 926


ஆசியாவைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் பல மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று பரிசில் இடம்பெற்றுள்ளது.

இன்று ஜனவரி 30 ஆம் திகதி அதிகாலை பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சீனாவில் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவரது வீட்டுக்குள் அதிகாலை 4.20 மணி அளவில் நுழைந்த இரு கொள்ளையர்கள், அங்கிருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றனர்.

கொள்ளையர்கள் கதவை உடைக்காமல் கள்ளச்சாவி போட்டு திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்