Paristamil Navigation Paristamil advert login

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்குடன் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் சந்திப்பு!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்குடன் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர்  சந்திப்பு!

30 தை 2026 வெள்ளி 11:15 | பார்வைகள் : 994


கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானியப் பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ பயணமாக காணப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளால் உலகளாவிய பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பிரித்தானியாவின் இந்தப் பயணம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பீஜிங்கில் உள்ள 'கிரேட் ஹால் ஆஃப் த பீப்பிள்' மண்டபத்தில் 80 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையே "ஆரோக்கியமான மற்றும் நிலையான" உறவை வளர்க்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

பிரித்தானியாவின் புகழ்பெற்ற 'விஸ்கி' மதுபானம் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க சீனா இணங்கியுள்ளது. இது பிரித்தானிய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் வாய்ப்பாக அமையும்.

பிரித்தானியப் பிரஜைகளுக்கு சீனாவுக்குச் செல்ல 'விசா இல்லா பயணச் சலுகை' வழங்குவது குறித்து சீனா தீவிரமாகப் பரிசீலிப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங் உறுதியளித்துள்ளார்.

ஆள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக இணைந்து செயல்படவும், குறிப்பாக சிறிய படகுகளில் பயன்படுத்தப்படும் சீனத் தயாரிப்பு எஞ்சின்களைக் கட்டுப்படுத்தவும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

"சீனா உலக அரங்கில் ஒரு தவிர்க்க முடியாத சக்தி. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்காக நாம் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்" எனப் பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்தார். ஷேக்ஸ்பியர் மற்றும் கால்பந்து குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்