Paristamil Navigation Paristamil advert login

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,விடம் விலை போய் விடுவர்! கனிமொழி

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,விடம் விலை போய் விடுவர்! கனிமொழி

30 தை 2026 வெள்ளி 14:55 | பார்வைகள் : 591


வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காவிட்டால், தேர்ந்தெடுக்கப்படும் காங்., - எம்.எல்.ஏ.,க்களை, பா.ஜ., வளைத்து விடும்' என, ராகுலிடம் கனிமொழி கூறிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கூட்டணி விவகாரங்கள் பற்றி, காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கருடன் பேச, முதல்வர் ஸ்டாலின் விரும்பவில்லை. அதனால், ராகுலை சந்தித்து பேச, கனிமொழி அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது, 'ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில், காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது. அதுபோல தமிழகத்திலும் ஆட்சியில் பங்கு வேண்டும் என பெரும்பாலான நிர்வாகிகள் விரும்புகின்றனர்' என, ராகுல் தெரிவித்துள்ளார்.

அதற்கு கனிமொழி அளித்த நீண்ட விளக்கம்: தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடந்ததில்லை. 1980, 2011 சட்டசபை தேர்தல்களில் கூட்டணி ஆட்சிக்கு உடன்பட்டு, கருணாநிதி தொகுதி பங்கீடு செய்தார். 1980ல் தி.மு.க.,வும், காங்கிரசும் சரி பாதி இடங்களை பகிர்ந்து கொண்டன. ஆனால், இந்த இரண்டு முறையும் ஆட்சியை பிடிக்கவில்லை.

தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், ஆட்சி அமைக்க பா.ஜ., விடாது.

அப்படியே அமைத்தாலும், காங்., உள்ளிட்ட சில கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களை வளைத்து, ஆட்சியை கலைத்து விடும். தி.மு.க.,வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அது தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சிக்கு வழி வகுக்கும். எனவே, கூட்டணி ஆட்சி கோரிக்கையை ஏற்க முடியாது. காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கொடுத்தால், மற்ற கூட்டணி கட்சிகளும் அதிகம் கேட்கும். இதை புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்