திராவிட கட்சிகள் கண்டுகொள்ளாத ஜாதியினருக்கு நா.த.க.,வில் சீட்
30 தை 2026 வெள்ளி 12:36 | பார்வைகள் : 608
திராவிட கட்சிகள் கண்டுகொள்ளாத ஜாதியினருக்கு, தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சி வாய்ப்பு வழங்க உள்ளது.
திருச்சியில் வரும் பிப்., 21ம் தேதி, மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டை, நாம் தமிழர் கட்சி நடத்துகிறது. அதில், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்கிறார்.
இதுவரை தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற திராவிட கட்சிகள் கண்டுகொள்ளாத ஜாதிகளை சேர்ந்தவர்களுக்கும், வாய்ப்பு வழங்க சீமான் திட்டமிட்டு உள்ளார்.
நா.த.க.,வினர் கூறியதாவது:
தேர்தலில் 117 ஆண்கள், 177 பெண்கள், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட உள்ளனர். இதுவரையிலும் திராவிட கட்சிகள் கண்டுகொள்ளாத சமூக மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், நா.த.க., வேட்பாளர் பட்டியல் இருக்கும். மேலும், பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள், பொது தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan