வாய் கூசாமல் பொய் சொல்கிறார்: ஸ்டாலின் மீது விஜய் தாக்கு
30 தை 2026 வெள்ளி 08:26 | பார்வைகள் : 737
சட்டம் - ஒழுங்கு விஷயத்தில், முதல்வர் ஸ்டாலின் வாய் கூசாமல் பொய் சொல்கிறார்' என, த.வெ.க., தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில் நாள்தோறும் நடக்கும் குற்றச்சம்பவங்கள்தான், சட்டம் - ஒழுங்கு சீரழிந்து விட்டதற்கான சான்று. சென்னையில் அடுத்தடுத்து நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தால், தமிழகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.
சென்னை அடையாறில், பீஹார் தொழிலாளி மற்றும் அவரது மனைவி, குழந்தை படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, நந்தனம் அரசுக்கல்லுாரி கேன்டீனில், இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி உள்ளார்.
தமிழக மக்களுக்கும், இங்கு பிழைப்புக்காக வந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழலைத்தான், கபட நாடக தி.மு.க., அரசு உருவாக்கி உள்ளது. கொள்ளை அடிப்பதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருக்கின்றனர்.
அதனால்தான் எதிரான குற்றங்களை தடுக்க முடியவில்லை; சமூக விரோதக் கும்பல்களுக்கு துணிச்சலும் வருகிறது.
ஆனால், மனசாட்சியே இல்லாமல், 'தமிழகம் பாதுகாப்பாக உள்ளது; எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி' என, முதல்வர் ஸ்டாலின் வாய் கூசாமல் பொய் சொல்கிறார். விளம்பர மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுத, மக்கள் தயாராகி விட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan