தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது - எடப்பாடி பழனிசாமி
30 தை 2026 வெள்ளி 05:15 | பார்வைகள் : 630
சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;
தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு ஆட்சியை பிடித்த திமுக, ஆட்சிக்கு வந்தபின் தேர்தல் வாக்குறுதிகளை மறந்துவிட்டது. 98% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக தவறான தகவலை தெரிவிக்கிறது.
திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக்களமாக மாறியுள்ளது. திமுக ஆட்சியில் ஆசிரியர்கள், செவிலியர்கள் என பலரும் போராட்டம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. அரசு உள்ளதா, இல்லையா என்றே தெரியவில்லை.
2011 தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட திமுக அமரவில்லை. பல தேர்தல்களில் திமுக தோல்வியை தழுவியுள்ளது. அதிமுக ஆட்சியில் இருசக்கர வாகனம் வாங்க 5 லட்சம் மகளிருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அம்மா மினி கிளினிக் கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan