பிரித்தானியர்கள் சீனா செல்ல விசா தேவையில்லை
29 தை 2026 வியாழன் 17:04 | பார்வைகள் : 743
பிரித்தானிய நாட்டவர்கள் இனி 30 நாட்கள் வரையிலான குறுகிய காலச் சுற்றுலா மற்றும் வணிகப் பயணங்களுக்கு சீனா செல்லும்போது அவற்றுக்கு விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சீனாவினால் வழங்கப்பட்ட அதே சலுகையை இப்போது பிரித்தானியாவும் பெற்றுள்ளது.
இதற்கிடையில் பிரித்தானியாவைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி மருந்து நிறுவனமான எஸ்ட்ராசெனொகா சீனாவில் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்யப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதேவேளை 2018 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிரித்தானிய வரலாற்றில் பிரதமர் ஒருவர் சீனாவுக்கு பயண்ம் செய்துள்ளது இதுவே முதல் முறை ஆகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan