Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்து ராணுவத்தை வலுப்படுத்துவதற்காக மக்களுக்கு வரி விதிக்க திட்டம்

 சுவிட்சர்லாந்து ராணுவத்தை வலுப்படுத்துவதற்காக மக்களுக்கு வரி விதிக்க  திட்டம்

29 தை 2026 வியாழன் 15:24 | பார்வைகள் : 737


உக்ரைனை ரஷ்யா ஊடுருவிய விடயம், பல நாடுகளுக்கு நிரந்தர அச்சத்தை உருவாக்கிவிட்டது. ஆகவே, தங்கள் ராணுவங்களை பலப்படுத்தும் முயற்சிகளில் பல நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

அவ்வகையில், சுவிட்சர்லாந்தும் தன் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

ஆனால், ராணுவத்தை வலுப்படுத்த பணம் வேண்டுமே! ஆகவே, வரிகள் மூலம் அந்த பணத்தைப் பெற திட்டமிட்டுவருகிறது சுவிட்சர்லாந்து அரசு.

குறிப்பாக, VAT என்னும் மதிப்புக்கூட்டு வரியை அதிகரிக்க ஆளும் ஃபெடரல் கவுன்சில் திட்டமிட்டுவருகிறது.

2028ஆம் ஆண்டு முதல் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மதிப்புக்கூட்டு வரியை 0.8 சதவிகிதம் அதிகரிக்கலாம் என்கிறது ஃபெடரல் கவுன்சில்.

இதன் மூலம் நாட்டுக்கு சுமார் 30 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் கிடைக்கும். விடயம் என்னவென்றால், சில நாடுகளைப் போல எடுத்தோம் கவிழ்த்தோம் என அதிரடியாக மக்கள் மீது வரிகளை திணிக்கமுடியாது சுவிட்சர்லாந்தில்.

திட்டத்தை மக்கள் முன் வைத்து, அவர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.

இதற்கிடையில், ஏற்கனவே இடதுசாரிகள், வலதுசாரிகள் என இருதரப்பிலும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்