எல்லா அதிகாரிகளும் எங்கள் சொல்லை கேட்க வேண்டிய காலம் வரும்: செங்கோட்டையன்
29 தை 2026 வியாழன் 12:03 | பார்வைகள் : 684
எல்லா அதிகாரிகளும் நம் சொல்லை கேட்கும் காலம் விரைவில் வரும், என, த.வெ.க., செயல் வீரர்கள் கூட்டத்தில், தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசினார்.
த.வெ.க., சென்னை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று நடந்தது.
இணைப் பொதுச் செயலர் நிர்மல் குமார் பேசுகையில், “சென்னை தி.மு.க.,வின் கோட்டை என்பது பழைய கதை. தற்போது விஜயின் கோ ட்டையாகி விட்டது . ஸ்டாலினும், உதய நிதியும் தொகுதி மாற போகின்றனர். தி.மு.க., ஆட்சி நீடித்தால் சென்னைக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே அழிவுதான்,'' என்றார்.
தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசுகையில்,
நான் பல தலைவர்களுடன் பயணித்து இருக்கிறேன். மிகப் பெரிய கூட்டத்தை கூட்ட, ஒரு கோடி ரூபாய் செலவாகும். ஆனால், ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், விஜய்க்கு கூட்டம் கூடுகிறது. இன்னும் மூன்று மாதங்களில், எல்லா அதிகாரிகளிலும் நம் பேச்சை கேட்கும் காலம் வந்து விடும். இதை யாராலும் தடுக்க முடியாது,'' என்றார்.
தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
முதல்வர், துணை முதல்வர், இரண்டு அமைச்சர்கள் இருந்தும், சென்னையில் எதுவுமே மாறவில்லை. தென் சென்னையில் இருக்கும் முன்னேற்றம் வடசென்னையில் இல்லை. வடசென்னை மக்களை, தி.மு.க., தவறாக பயன்படுத்துகிறது.
அ.தி.மு.க., ஏற்கனவே காணாமல் போய் விட்டது; அவர்களை பற்றி பேச வேண்டாம். இந்நேரம், 32 மாவட்டங்களில், விஜய் சுற்றுப்பயணம் செய்திருக்க வேண்டும். அதை தடுக்கவே, கரூரில் சூழ்ச்சி செய்தனர். அதை, 30 நாளில், கரூர் மக்கள் துாக்கி எறிந்து விட்டனர். அதேபோல், ரவுடிகளை வைத்து அரசியல் செய்யும் தி.மு.க.,வையும் மக்கள் துாக்கி எறிவர், என்றார்.
இறுதியாக, பொதுச் செயலர் ஆனந்த் பேசுகையில்,
த.வெ.க., கூட்டம் நடத்த, போலீசார் அனுமதி கொடுப்பதில்லை. விஜயை பார்த்து ஆட்சியாளர்கள் அச்சப்படுகின்றனர், என்றார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan