வெளியூர் மாணவர்களுக்கு தபால் ஓட்டு: தேர்தல் கமிஷன் பதிலளிக்க உத்தரவு
29 தை 2026 வியாழன் 11:01 | பார்வைகள் : 682
வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்கள் தேர்தலில் ஓட்டளிக்க வசதியாக தபால் ஓட்டு முறையை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதில் அளிக்கும்படி, மத்திய அரசு, தேர்தல் கமிஷன் மற்றும் யு.ஜி.சி.,க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
ஜெயசுதாகர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
தேர்தல் கமிஷனின் தரவுகளின் படி, 18 வயது முதல் 24 வயது வரையிலான இளைஞர்கள் தேர்தலில் ஓட்டளிப்பது வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாணவர்கள் வெளியூர்களில் தங்கிப் படிப்பதே இதற்கு முக்கிய காரணம்.
எனவே இத்தகைய மாணவர்களும் தேர்தல்களில் ஓட்டளிக்க வசதியாக புதிய நடைமுறைகளை கொண்டு வர வேண்டும்.
குறிப்பாக வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தபால் ஓட்டு முறையை அறிமுகப்படுத் த வேண்டும்.
அதேபோல தேர்தல் நடக்கும் தேதிகளில் வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுப்பு எடுக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனு மீது மத்திய அரசு, தேர்தல் கமிஷன் மற்றும் யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழு பதிலளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan