அரிய வகை கனிமங்கள் மாநாடு: அமெரிக்கா செல்கிறார் ஜெய்சங்கர்
29 தை 2026 வியாழன் 09:47 | பார்வைகள் : 639
அமெரிக்காவில் பிப்ரவரி 4ம் தேதி நடக்க உள்ள, அரிய வகை கனிமங்கள் தொடர்பான சர்வதேச நாடுகளின் அமைச்சர்கள் பங்குபெறும் மாநாட்டில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார்.
மின்னணு சாதனங்களான, மொபைல் போன், லேப்டாப், கணினி மற்றும் அதில் பயன்படுத்தப்படும் செமி கண்டக்டர்கள் எனப்படும் சிப்கள், மின்சார வாகன பேட்டரிகள், சூரிய மின் உற்பத்திக்கான தகடுகள் போன்ற பலவற்றுக்கு அரிய வகை கனிமங்கள் தேவை.
லித்தியம், கிராபைட், கோபால்ட், நிக்கல் உள்ளிட்டவை அரிய வகை கனிமங்களாக வகைப் படுத் தப்பட்டுள்ளன. இவற்றில், 60 முதல் 90 சதவீதம் வரை சீனாவில் கிடைக்கிறது. ஆஸ்திரேலியா, காங்கோ, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலும் இந்த வகை கனிமங்கள் உள்ளன.
இந்நிலையில், அரசியல் மற்றும் வர்த்தக பதற்றங்கள் ஏற்பட்டால், இதன் வினியோக தொடர் பாதிக்கப்படும். இந்த நிலையை மாற்றி, வினியோகத்தை பல நாடுகளுக்கு பரவ செய்ய அமெரிக்கா விரும்புகிறது. இதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
கடந்த 13ம் தேதி, அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தலைமையில் ஒரு மாநாடு நடந்தது. அதில், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார்.
தற்போது அரிய கனிமங்கள் தொடர்பாக விவாதிக்க, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பிப்ரவரி 4ம் தேதி மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாட்டில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று கருத்துகளை பரிமாற உள்ளார்.
சமீபத்தில், இந்தியா - அமெரிக்கா உறவுகளில் வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக, அமெரிக்க எம்.பி.,க்கள் குழு மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க துாதருடன் அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து அவரது பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan